Skip to content

“J.K. டயர்ஸ் இல்லை.. ஸ்பெல்லிங் மிஸ்டேக்!” – தவெக MLA தாஹிரா விளக்கம்

சட்டப்பேரவையில் J.K. டயர்ஸ் நிறுவனத்தின் பெயரை தவறாக குறிப்பிட்டது குறித்து தவெக MLA தாஹிரா விளக்கம் அளித்துள்ளார்.

J.K. டயர்ஸ் விவகாரம் குறித்து தவெக MLA தாஹிரா விளக்கம் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் அந்த நிறுவனத்தின் பெயரை தவறாக குறிப்பிட்டதாகவும், அது தட்டச்சு செய்து கொடுத்தவர்களின் ஸ்பெல்லிங் மிஸ்டேக் காரணமாக நடந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தாஹிரா கூறுகையில், “அது நம்ம மிஸ்டேக் தான்; டைப் செய்து கொடுத்தவங்க ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணி இருக்காங்க. அந்த நிறுவனத்தைப் பற்றி பேசக்கூடாது. ஸ்பெல்லிங் மிஸ்டேக் காரணமாக அதை அப்படியே பேசிட்டேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும், தான் குறிப்பிட்டது J.K. டயர்ஸ் நிறுவனம் இல்லை என்றும், பெயர் குறிப்பிடப்பட்டதில் தவறு ஏற்பட்டுவிட்டதாகவும் தாஹிரா தெளிவுபடுத்தியுள்ளார்.

சட்டப்பேரவையில் பேசியபோது நிறுவனத்தின் பெயரை தவறாக குறிப்பிட்டதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ள தவெக MLA தாஹிராவின் இந்த கருத்து கவனம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *