1908 திருநெல்வேலி எழுச்சி நினைவுச் சின்னம் தொடர்பான பணிகளை தற்போதைய அரசு கைவிடாமல் நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
வ.உ. சிதம்பரனாரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், அவரது வாழ்வும் பணிகளும் அனைவரையும் சென்றடையும் வகையில் திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செக்கிழுத்த செம்மல் என்று போற்றப்படும் வ.உ.சிதம்பரனாருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், 1908 திருநெல்வேலி எழுச்சி நினைவுச் சின்னம் அமைப்பதற்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசும் அந்த அறிவிப்பைக் கைவிடாமல், 1908 திருநெல்வேலி எழுச்சி நினைவுச் சின்னத்தை நிறைவேற்றிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தமிழர்களின் சிந்தையில் இருந்து என்றும் அகலாத வ.உ. சிதம்பரனாரின் பிறந்தநாளில் இந்த கோரிக்கையை முன்வைப்பதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
