Skip to content

“KING KOHLI” – ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச் சிறந்த வீரர் விராட் கோலி: மேக்ஸ்வெல் புகழாரம்

விராட் கோலி சிறந்த வீரர் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் புகழாரம் சூட்டியுள்ளார். தான் பார்த்த ஒருநாள் கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலிதான் மிகச் சிறந்தவர் என அவர் தெரிவித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலியின் பேட்டிங் திறமை, தொடர்ச்சியான செயல்பாடு மற்றும் போட்டியை வெற்றிகரமாக முடிக்கும் திறன் தனித்துவமானது என மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

அதேபோல், வெவ்வேறு வடிவிலான கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்கள் குறித்தும் மேக்ஸ்வெல் தனது கருத்தை தெரிவித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் ஆண்ட்ரே ரஸல் மிகச் சிறந்த வீரர் என்றும், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டீவ் ஸ்மித் சிறந்த வீரர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலியை தனது விருப்பமான சிறந்த வீரராக மேக்ஸ்வெல் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து கோலி ரசிகர்கள் மத்தியில் அவரது கருத்து கவனம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *