Skip to content

கள்ளக்குறிச்சியில் “வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2026” அறிவியல் கண்காட்சி தொடக்கம்

வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2026 அறிவியல் கண்காட்சி கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் பகுதியில் உள்ள ஆக்ஸாலிஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் தொடங்கியது. புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சார்பில் நடைபெறும் இந்த அறிவியல் கண்காட்சியை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஜெ.இ.பத்மஜா தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார்) டி.விஷ்ணுமூர்த்தி மற்றும் ஆக்ஸாலிஸ் இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளர் கே.பரத் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2026 அறிவியல் கண்காட்சி தொடக்க நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் ஜெ.இ.பத்மஜா, மாவட்ட கல்வி அலுவலர் டி.விஷ்ணுமூர்த்தி மற்றும் பள்ளியின் தாளாளர் கே.பரத் குமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் வகையிலும், அவர்களின் அறிவியல் சிந்தனை மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையிலும் இந்தக் கண்காட்சி அமைந்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் நடைபெறும் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2026 அறிவியல் கண்காட்சி, மாணவர்களின் அறிவியல் திறன்களை வெளிக்கொண்டு வருவதற்கான முக்கியமான வாய்ப்பாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *