ட்ரம்ப் – ஈரான் போர் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கையை ‘போர்’ என அழைக்க முடியாது என்றும், அது அமெரிக்காவுக்கு “Small Potatoes” போன்ற ஒரு சிறிய விஷயம் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
“எங்களுக்கு இது சின்ன விஷயம்”
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், தற்போதைய நிலைமையை “Military Conflict” என அழைப்பதாக தெரிவித்தார்.
அமெரிக்காவின் நடவடிக்கை மிகப்பெரிய போர் அல்ல என்றும், அவ்வப்போது மட்டுமே தாக்குதல்கள் நடைபெற்று வருவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் “Small Potatoes” என்ற வார்த்தையை பயன்படுத்தி, இந்த மோதல் அமெரிக்காவுக்கு பெரிய விஷயம் இல்லை எனக் குறிப்பிட்டார்.
Pickaxe Mountain மீது தாக்குதல்?
இதற்கிடையே, ஈரானின் அணுசக்தி திட்டத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் Pickaxe Mountain மீது அமெரிக்கா மிக விரைவில் தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
Natanz அணுசக்தி வளாகத்திற்கு அருகே அமைந்துள்ள Pickaxe Mountain பகுதியில் ஆழமான நிலத்தடி சுரங்க வளாகங்கள் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த இடம் ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சந்தேகித்து வருகின்றன.
மேலும் அதிகரிக்குமா பதற்றம்?
ஒருபுறம் மோதலை “Small Potatoes” என ட்ரம்ப் குறைத்து மதிப்பிட்டுள்ள நிலையில், மறுபுறம் Pickaxe Mountain மீது தாக்குதல் நடத்தப்படும் என அவர் விடுத்துள்ள எச்சரிக்கை சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ளது.
ட்ரம்ப் – ஈரான் போர் தொடர்பான பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், Pickaxe Mountain மீது அமெரிக்கா உண்மையில் தாக்குதல் நடத்துமா என்பது அடுத்தகட்ட முக்கிய கேள்வியாக உள்ளது.
