மியாமி விமான நிலையம் அருகே வாகனங்கள் மீது விமானம் மோதியதில் சோகம்
அமேசான் சரக்கு விமானம் விபத்து அமெரிக்காவின் மியாமி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையத்திற்கு பின்புறமுள்ள சாலையில் வாகனங்கள் மீது விமானம் மோதியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமேசான் நிறுவனத்துக்குச் சொந்தமான சரக்கு விமானம் மியாமி விமான நிலையத்தில் விபத்தில் சிக்கியது. விமானம் விமான நிலையத்தின் பின்புறமுள்ள சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது மோதியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். விமானத்தில் ஏற்பட்ட தீ மற்றும் எரிபொருள் கசிவு காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புக் குழுவினர், விமானத்தில் ஏற்பட்ட தீயையும் எரிபொருள் கசிவையும் போராடி கட்டுப்படுத்தினர்.
அமேசான் சரக்கு விமானம் விபத்து தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்கான முழுமையான காரணம் குறித்து விசாரணையின் முடிவில் கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
