Skip to content

கரூர் கூட்ட நெரிசல்; டெல்லியில் சிபிஐ முன் 2ஆவது முறையாக விசாரணைக்கு ஆஜரானார் விஜய்!

டெல்லி,ஜன.19; கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் இன்று (19.01.2026) இரண்டாவது முறையாக விசாரணைக்கு ஆஜரானார்.

சிபிஐ விசாரணை; கரூர் வழக்கின் பின்னணி

செப்டம்பர் 27, 2025 – கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலி

செப்டம்பர் 28, 2025 – ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் உத்தரவு

அடுத்த சில நாட்களில் தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த்
உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்கு

அக்டோபர் 5, 2025 – ஐபிஎஸ் அதிகாரி அஸ்ரா கார்க் தலைமையில் எஸ்.ஐ.டி விசாரணையை தொடக்கம்

அக்டோபர் 13, 2025 – சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு;
ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் கண்காணிப்பு குழு அமைப்பு

தவெக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்திய சிபிஐ

இதன் தொடர்ச்சியாக கரூரில் விசாரணைக்கென தனி அலுவலகம் அமைக்கப்பட்டு, காவல்துறை அதிகாரிகள், தவெக நிர்வாகிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

பின்னர் தவெக நிர்வாகிகள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், கரூர் மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.

பின்னர் கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு விஜய் பயன்படுத்திய
வாகனத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ஜனவரி 12ஆம் தேதி விஜய்யிடம் முதல்கட்ட விசாரணை

இதன் பின்னர், கடந்த 12ஆம் தேதி தவெக தலைவர் விஜய்யும் டெல்லி சென்று சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் இரண்டு நாட்கள் விசாரணை நடத்தப்பட்டு, அவர் அளித்த பதில்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இதன் தொடர்ச்சியாக தவெக தலைவர் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜயிடம் மேலும் விசாரணை நடத்த சிபிஐ விரும்பியதாகவும், பொங்கலை முன்னிட்டு வேறொரு தேதியில் விசாரணைக்கு ஆஜராவதாக விஜய் தெரிவித்ததாகவும் செய்தி நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.

விஜய்யிடம் சிபிஐ விசாரணை இன்று நிறைவுபெறும்?

ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய்யிடம் நடத்தப்படும் விசாரணை இன்றைக்கு முடிவுக்கு வந்துவிடும் எனக் கூரப்படுகிறது. இந்த வழக்கில் சிபிஐ பதிவுசெய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் விஜய் பெயர் இல்லையென்றாலும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *