Skip to content

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; ஜோகோவிச்சை வீழ்த்தி சரித்திரம் படைத்தார் கார்லோஸ் அல்காரஸ்!



மெல்போர்ன்,பிப்.02; மெல்போர்ன் நகரின் ‘ராட் லேவர்’ அரங்கில் நேற்று (01.02.2026) நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், உலகின் முதல் நிலை வீரர் கார்லோஸ் அல்காரஸ் மற்றும் 24 முறை கிராண்ட் ஸ்லாம் வென்ற நோவக் ஜோகோவிச் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 2-6, 6-2, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் அல்காரஸ் வெற்றி பெற்று தனது முதல் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தைக் கைப்பற்றினார்

போட்டியின் முக்கிய தருணங்கள்

போட்டியின் ஆரம்பத்தில் 38 வயதான அனுபவ வீரர் ஜோகோவிச் அதிரடியாக விளையாடி முதல் செட்டை 6-2 என எளிதாகக் கைப்பற்றினார். ஆனால், அதன் பிறகு 22 வயதான அல்காரஸ் தனது இளமைத் துடிப்புடன் மீண்டு வந்தார்.

அடுத்தடுத்த செட்களில் ஜோகோவிச்சின் வேகத்தைக் குறைத்து, அபாரமான ‘ஃபோர்ஹேண்ட்’ மற்றும் ‘டிராப் ஷாட்’கள் மூலம் ஆட்டத்தைத் தன் வசப்படுத்தினார். நான்காவது செட்டில் இருவரும் சமபலத்துடன் மோதினாலும், இறுதியில் அல்காரஸ் தனது சிறப்பான ஆட்டத்தால் வெற்றியை உறுதி செய்தார்.

கார்லோஸ் அல்காரஸின் வரலாற்று சாதனைகள்

இந்த வெற்றியின் மூலம் அல்காரஸ் பல முக்கிய சாதனைகளைத் தன்வசப்படுத்தியுள்ளார்:

டென்னிஸ் வரலாற்றில் நான்கு முக்கிய பட்டங்களையும் வென்ற வீரர்களின் பட்டியலில் கார்லோஸ் அல்காரஸூம் தற்போது இணைந்துள்ளார். இதற்கு முன்னர் ஜோகோவிச் (Djokovic0, ரோஜர் பெடரர் (Roger Federer), ஆண்ட்ரே அகாசி (Andre Agassi), ராட் லேவர் (Rod Laver), ராய் எமர்சன் (Roy Emerson), டான் பட்ஜ் (Don Budge), பிரெட் பெர்ரி (Fred Perry) மற்றும் ராட் லேவர் அரங்கில் முன் வரிசையில் இருந்து இறுதிப் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த சக வீரர் ரஃபேல் நடால் ஆகியோர் அந்த சாதனையைப் படைத்திருந்தனர். 1938 ஆம் ஆண்டு பிரெஞ்சு சாம்பியன்ஷிப்பில் பட்ஜ் 22 வயது 363 நாட்களில் வென்ற சாதனையை முறியடித்து, அல்கராஸ் இளையவர் ஆவார்7-வது கிராண்ட் ஸ்லாம்: இது அல்காரஸின் ஒட்டுமொத்த 7-வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும்.

தடைபட்ட ஜோகோவிச்சின் கனவு: 25ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று டென்னிஸ் வரலாற்றில் அதிக பட்டம் வென்றவர் என்ற சாதனையைப் படைக்க ஜோகோவிச் காத்திருந்தார். ஆனால், அல்காரஸ் அந்த கனவைத் தடுத்து நிறுத்தினார்.

ஜோகோவிச்சின் நெகிழ்ச்சியான பேச்சு

தோல்விக்குப் பிறகு பேசிய ஜோகோவிச், “கார்லோஸ் இந்த வெற்றிக்கு முற்றிலும் தகுதியானவர். அவர் விளையாடிய விதம் அற்புதம். டென்னிஸ் உலகின் எதிர்காலம் பாதுகாப்பான கைகளில் உள்ளது” என்று அல்காரஸைப் பாராட்டினார். அல்காரஸ் தனது பேச்சில், “ஜோகோவிச் போன்ற ஒரு ஜாம்பவானுடன் விளையாடுவது எனக்கு எப்போதும் பெருமை. இது எனது கனவு நனவான தருணம்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

டென்னிஸ் உலகின் புதிய ராஜா ‘கார்லோஸ் அல்காரஸ்’

இந்த வெற்றி டென்னிஸ் விளையாட்டில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் குறிக்கிறது. ‘பிக் த்ரீ’ (ஃபெடரர், நடால், ஜோகோவிச்) சகாப்தத்திற்குப் பிறகு, கார்லோஸ் அல்காரஸ் டென்னிஸ் உலகின் புதிய ராஜாவாக உருவெடுத்துள்ளார். அவரது இந்த வெற்றி வரும் காலங்களில் இன்னும் பல சாதனைகளுக்கு அடித்தளமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *