Skip to content

அதிமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை? பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி!

சென்னை,மார்ச்.25; ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது.

இதில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு 27, பாமக 18, அமமுக 11, தமிழ் மாநில காங்கிரஸ் 5, இந்திய ஜனநாயகக் கட்சி 2, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் புதிய பாரதம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

கூட்டணிக்கு தலைமை ஏற்றிருக்கும் அதிமுக எஞ்சிய 169 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

பாஜக, பாமக, அமமுக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

இந்தநிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்கிற பட்டியலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (மார்ச் 25,புதன்கிழமை) வெளியிட்டார்.

அதன்படி, பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 27 தொகுதிகள் பின்வருமாறு;

  1. மயிலாப்பூர், 2. தளி, 3. மொடக்குறிச்சி, 4. உதகமண்டலம், 5. அவிநாசி, 6. திருப்பூர் தெற்கு, 7. கோவை வடக்கு, 8. கந்தர்வக்கோட்டை, 9. புதுக்கோட்டை, 10. திருப்பத்தூர், 11. மதுரை தெற்கு, 12. சாத்தூர், 13. திருச்செந்தூர், 14. வாசுதேவநல்லூர், 15. ராதாபுரம், 16. நாகர்கோவில், 17. விளவங்கோடு, 18. ஆவடி, 19. திருவண்ணாமலை, 20. தஞ்சாவூர், 21. திருவாரூர், 22. அறந்தாங்கி, 23. மானாமதுரை, 24. ராமநாதபுரம், 25. குளச்சல், 26. பத்மநாபபுரம், 27. ராசிபுரம் – ஆகிய தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோல, பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 18 தொகுதிகள் பின்வருமாறு:

  1. சேலம் மேற்கு, 2. தர்மபுரி, 3. பென்னாகரம், 4. விக்கிரவாண்டி, 5. சோளிங்கர், 6. மயிலாடுதுறை, 7. திருப்போரூர், 8. உத்திரமேரூர், 9. ஜெயங்கொண்டம், 10. போளூர், 11. செஞ்சி, 12. விருத்தாசலம், 13. ரிஷிவந்தியம், 14. காட்டுமன்னார்கோவில், 15. கீழ்வேளூர், 16. பெரம்பலூர், 17. சேலம் வடக்கு, 18. அம்பத்தூர்- ஆகிய 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

இதேபோன்று அமமுக-வுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 11 தொகுதிகள் பின்வருமாறு;

  1. பெரியகுளம், 2. மன்னார்குடி, 3. திருவையாறு, 4. காரைக்குடி, 5. திருப்பத்தூர், 6. நாங்குநேரி, 7. ஒட்டப்பிடாரம், 8. திருச்சி மேற்கு, 9. சைதாப்பேட்டை, 10. பூந்தமல்லி, 11. மடத்துக்குளம்,

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 5 தொகுதிகள் பின்வருமாறு;

  1. ஒட்டன்சத்திரம், 2. ஈரோடு மேற்கு, 3. ராணிப்பேட்டை, 4. கிள்ளியூர், 5. கும்பகோணம்.

பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சிக்கு பல்லாவரம், குன்னம் ஆகிய இரண்டு தொகுதிகளும், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு ராஜபாளையம் தொகுதியும், பூவை ஜெகன் மூர்த்தியின் புரட்சி பாரதம் கட்சிக்கு கே.வி. குப்பம் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *