முதலமைச்சர் அலுவலக மாற்றம் குறித்து கேள்வி
CM விஜயின் பதில் என்ன? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். முதலமைச்சரின் அறையை மாற்றும் பணிகளுக்கான டெண்டர் அறிவிப்புக்கு முன்பாகவே பணிகள் தொடங்கப்பட்டது எப்படி என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாருடைய உத்தரவின் அடிப்படையில் பணிகள் தொடங்கப்பட்டன? எந்த அடிப்படையில் ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டார்? பணிகள் தொடங்கிய பின்னர் டெண்டர் கோரியது ஏன்? அதற்கான ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாதது ஏன்? என டிடிவி தினகரன் தொடர்ச்சியாக கேள்விகளை முன்வைத்துள்ளார்.
“முதலமைச்சர் விஜயின் பதில்தான் என்ன?”
முதலமைச்சரின் அறை மாற்றம் தொடர்பான டெண்டர் நடைமுறையில் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு அரசு தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் என்ன பதில் அளிக்கப் போகிறார்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். டெண்டர் அறிவிப்பு, பணிகள் தொடங்கிய காலம் மற்றும் ஒப்பந்ததாரர் தேர்வு தொடர்பான விவரங்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
