Skip to content

“ஒருவிரல் புரட்சி விசில் புரட்சியானது” – மக்களாட்சியை ஆதரித்த மக்களுக்கு முதல்வர் விஜய் நன்றி

ஒருவிரல் புரட்சி

தமிழ்நாட்டின் புதிய அரசியல் மாற்றத்தை சுட்டிக்காட்டும் வகையில், “மக்களாட்சியை ஆதரித்த அனைவருக்கும் நன்றி” என முதல்வர் விஜய் தனது நன்றியை தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர், மக்களின் ஆதரவு தான் இந்த வெற்றியின் அடித்தளம் என்றும் கூறினார்.

“மனசாட்சி உள்ள மக்களாட்சியை ஆதரித்த உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்று குறிப்பிட்ட முதல்வர் விஜய், தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு அரசியல் வரலாறு திரும்பியுள்ளதாக தெரிவித்தார்.

1967 மற்றும் 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களை நினைவுகூர்ந்த அவர், “அந்த காலகட்டங்களைப் போலவே சாமானியர்களின் அரசை அமைப்போம் என்று கூறினோம். இன்று அந்த வரலாறு மீண்டும் திரும்பியுள்ளது” என்றார்.

மேலும், தேர்தல் பிரசாரத்தின் போது மக்கள் மத்தியில் உருவான “விசில் அலை” தற்போது “வெற்றி அலையாக” மாறிவிட்டதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். “ஒருவிரல் புரட்சி விசில் புரட்சியானது” என்ற அவரது வரிகள் சட்டப்பேரவையிலும் அரசியல் வட்டாரங்களிலும் கவனம் பெற்றது.

கட்சி தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில், 34.92 சதவீத வாக்குகளுடன் தவெக தமிழ்நாட்டின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளதாக முதல்வர் விஜய் தெரிவித்தார். இது தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.

மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் செயல்படுவோம் என்றும், சாமானிய மக்களின் குரலாக இந்த அரசு இருக்கும் என்றும் முதல்வர் விஜய் உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *