Skip to content

GEN-Z இளைஞர்களை கவர பிரதமர் மோடியின் புதிய திட்டம்!

ஒரு பல்கலைக்கழகம், ஓர் அமைச்சர்’ என்ற முன்னெடுப்பில் மாணவர்களுடன் ஒன்றிய அமைச்சர்கள் நேரடியாக உரையாட திட்டம்

GEN-Z இளைஞர்கள் மீது கவனம் செலுத்தும் நோக்கில், ‘ஒரு பல்கலைக்கழகம், ஓர் அமைச்சர்’ என்ற புதிய முன்னெடுப்பை மேற்கொள்ள பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

GEN-Z இளைஞர்களை கவரும் நோக்கில், ‘ஒரு பல்கலைக்கழகம், ஓர் அமைச்சர்’ என்ற புதிய முன்னெடுப்பை மேற்கொள்ள பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, தினமும் ஒரு ஒன்றிய அமைச்சர், தங்களுக்கு ஒதுக்கப்படும் ஒரு பல்கலைக்கழகத்திற்குச் சென்று அங்கு பயிலும் மாணவர்களுடன் நேரடியாக உரையாட உள்ளதாக கூறப்படுகிறது.

மாணவர்களின் கோரிக்கைகளை கேட்டறிய திட்டம்

இந்த சந்திப்பின்போது, மாணவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமைச்சர்கள் கலந்துரையாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் மற்றும் அவர்களின் கோரிக்கைகளை நேரடியாக கேட்டறிந்து, அவற்றை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கும் இந்த முன்னெடுப்பு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இளைஞர்களுடன் நேரடி தொடர்பு

GEN-Z தலைமுறையினருடன் ஒன்றிய அமைச்சர்கள் நேரடியாக தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதற்கான ஒரு தளமாக இந்த திட்டம் அமைய உள்ளது. குறிப்பாக, இளம் தலைமுறையினரின் கருத்துகள் மற்றும் எதிர்பார்ப்புகளை அறிந்து கொள்வதில் இந்த பல்கலைக்கழக சந்திப்புகள் முக்கியத்துவம் பெறும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *