‘ரன்’ ரீ-ரிலீஸ் விழாவில் விஜயை குறித்து லிங்குசாமி கூறிய சுவாரஸ்ய தகவல்
இயக்குநர் லிங்குசாமி, ‘ரன்’ திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் விஜய் குறித்து சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது, ‘ரன்’ திரைப்படம் முதலில் நடிகர் விஜய்க்காகவே தயாரிக்கப்பட்டது. இந்தக் கதையை AVM நிறுவனம் மூலம் விஜய்க்கு சொல்ல அனுப்பியதாகவும், பின்னர் எஸ்.ஏ. சந்திரசேகரை (SAC) சந்தித்து கதையை விளக்கியதாகவும் தெரிவித்தார்.
ஆனால், அந்த காலகட்டத்தில் விஜயின் படத் திட்டங்கள் வேறுபட்டிருந்ததாகவும், ‘தமிழன்’ திரைப்படத்தில் விஜய் நடித்து வந்ததால், ஒரு பெண்ணைத் தொடர்ந்து செல்லும் காதல் கதைக்களம் அந்த நேரத்தில் பொருத்தமாக இருக்காது என்று SAC கருத்து தெரிவித்ததால் ‘ரன்’ திரைப்படம் விஜயிடம் இருந்து விலகியதாக லிங்குசாமி கூறினார்.
மேலும், பின்னர் ‘சண்டக்கோழி’ மற்றும் ‘வேட்டை’ திரைப்படங்களையும் விஜயை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனதாகவும், “அது என்னவோ சரியாக அமைந்து வரவில்லை” என்று லிங்குசாமி மனம் திறந்து பேசியுள்ளார்.
இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
