Skip to content

LION NEBULA – நாசா வெளியிட்ட பிரமிக்க வைக்கும் புதிய படம்!

அழியும் நிலையில் உள்ள நட்சத்திரத்தால் உருவான நெபுலா

LION NEBULA எனப்படும் லயன் நெபுலாவின் மிகத் தெளிவான புகைப்படத்தை நாசா வெளியிட்டு விண்வெளி ஆர்வலர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அழியும் தருவாயில் உள்ள ஒரு நட்சத்திரத்தால் உருவாகியுள்ள இந்த நெபுலா, அதன் தனித்துவமான தோற்றத்தால் கவனம் பெற்றுள்ளது.

அந்த நட்சத்திரத்தின் வெளிப்புற அடுக்குகள் தற்போது விண்வெளியில் உதிர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக நட்சத்திரத்தைச் சுற்றி வாயுக்கள் மற்றும் தூசிகள் பரவி நெபுலா உருவாகியுள்ளது.

10,000 ஆண்டுகளில் கலைந்துவிடும்!

லயன் நெபுலாவில் காணப்படும் வாயுக்கள் மற்றும் தூசிகள் நிரந்தரமாக இருக்காது என கணிக்கப்பட்டுள்ளது. அவை அடுத்த 10,000 ஆண்டுகளில் மெல்ல விண்வெளியில் கலைந்து மறைந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நட்சத்திரத்தின் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் நடைபெறும் இந்த மாற்றங்களை மிகத் தெளிவாக பதிவு செய்துள்ள நாசாவின் படம், பிரபஞ்சத்தில் நட்சத்திரங்களின் வாழ்க்கைச் சுழற்சி குறித்து புரிந்துகொள்ள உதவும் முக்கியமான காட்சியாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *