Skip to content

MEGA NSE IPO: ரூ.30,000 கோடி மதிப்பிலான பிரமாண்ட IPO-க்கு செபி ஒப்புதல்

NSE IPO வெளியிட இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி ஒப்புதல் அளித்துள்ளது. சுமார் ரூ.30,000 கோடி மதிப்பிலான மிகப்பெரிய IPO வெளியீட்டுக்கு அனுமதி கிடைத்துள்ளதால், இந்திய பங்குச்சந்தை துறையில் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தேசிய பங்குச்சந்தையான NSE (National Stock Exchange) நிறுவனத்தின் IPO வெளியீடு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒழுங்குமுறை தொடர்பான சிக்கல்களால் முடங்கியிருந்தது. தற்போது அந்த தடைகள் நீங்கியுள்ள நிலையில், IPO வெளியீட்டுக்கான நடவடிக்கைகள் முன்னேற உள்ளன.

ரூ.5 லட்சம் கோடியை தாண்டுமா?

NSE IPO மூலம் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. IPO வெளியீடு நடைபெறும் பட்சத்தில், இந்தியாவின் மிகப்பெரிய IPO-களில் ஒன்றாக இது அமையக்கூடும்.

NSE-யின் IPO வெளியீடு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. IPO-வின் வெளியீட்டு தேதி, விலைப்பட்டியல் உள்ளிட்ட அடுத்தகட்ட விவரங்கள் பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *