ரூ.7.5 கோடியில் நவீன பாதுகாப்பு வசதிகளுக்கு டெண்டர்.
NTA 24 Hour Security நடவடிக்கையின் கீழ், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து தேசிய தேர்வு முகமை (NTA), தனது தலைமை அலுவலகம் மற்றும் வட்டார அலுவலகங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு வழங்க ரூ.7.5 கோடி மதிப்பில் டெண்டர் கோரியுள்ளது.
இந்த பாதுகாப்பு திட்டத்தில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு, GPS அடிப்படையிலான ரோந்து கண்காணிப்பு, மெட்டல் டிடெக்டர்கள் (Metal Detectors), சிசிடிவி கண்காணிப்பு உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகள் இடம்பெறவுள்ளன. இந்த வசதிகளுடன் பாதுகாப்புப் பணிகளை திறம்பட மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
நீட் தேர்வின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் தேர்வு தொடர்பான பாதுகாப்பு குறைபாடுகளைத் தவிர்க்க இது முக்கிய நடவடிக்கையாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
