இந்த புதிய திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள சுமார் 7.8 கோடி EPFO உறுப்பினர்கள் நேரடியாக பயனடைவார்கள் என கூறப்படுகிறது. தற்போது PF தொகையை பெற ஆன்லைன் விண்ணப்பம் செய்து, சரிபார்ப்பு முடிவதற்காக பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் புதிய அமைப்பு அமலுக்கு வந்தால், உடனடி பரிவர்த்தனை சாத்தியமாகும்.
புதிய முறையில், EPFO கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு மற்றும் UPI ஐடி மூலம் பணத்தை சில நிமிடங்களிலேயே பெற முடியும். மேலும் ATM வழியாகவும் PF தொகையை எடுக்கும் வசதி அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வசதி குறிப்பாக அவசர மருத்துவ செலவுகள், கல்வி தேவைகள், வீட்டு அவசரங்கள் போன்ற சூழ்நிலைகளில் பணம் உடனடியாக தேவைப்படும் ஊழியர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும். டிஜிட்டல் இந்தியா முயற்சியின் ஒரு பகுதியாக இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
EPFO சேவைகளை மேலும் எளிமையாக்கும் நோக்கில் மத்திய அரசு பல புதிய முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதில் முக்கியமான மாற்றமாக இந்த UPI-ATM PF withdrawal திட்டம் பார்க்கப்படுகிறது.
இந்த புதிய சேவை அதிகாரப்பூர்வமாக அறிமுகமான பிறகு, PF தொகை பெறும் நடைமுறை இந்தியாவில் முழுமையாக மாற்றமடையும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்திய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, தனது சந்தாதாரர்களுக்கு மிகப்பெரிய டிஜிட்டல் மாற்றத்தை கொண்டு வரத் தயாராகியுள்ளது. இனி PF தொகையை பெற பல நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமின்றி, UPI மற்றும் ATM மூலம் உடனடியாக பணம் பெறும் புதிய வசதி இந்த மாதமே அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.