முதன்மை மற்றும் தேசிய செய்தித் தொடர்பாளர்களாக புதிய நியமனங்கள்.
தவெக புதிய நிர்வாகிகள் தொடர்பாக, திமுக, அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முக்கிய நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்புகளை முதல்வரும் தவெக தலைவருமான விஜய் அறிவித்துள்ளார்.
அதன்படி, வைகைச்செல்வன் மற்றும் கலைராஜன் ஆகியோர் தவெகவின் முதன்மை செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், அமெரிக்கை வி.நாராயணன் மற்றும் சசிரேகா ஆகியோர் தேசிய செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்கள் கட்சியின் தகவல் தொடர்பு மற்றும் அமைப்பு வலிமையை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகின்றன.
தவெகவில் புதிதாக இணைந்தவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதால், கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகளில் இவர்களின் பங்கு முக்கியமாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
