அமெரிக்காவில் டீசல் விலை வரலாறு காணாத உயர்வு: கேலன் ரூ.552.42 – ஈரான் போர் தாக்கம்
அமெரிக்காவில் டீசல் விலை ஈரான் போர் காரணமாக வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 3.78 லிட்டர் கொண்ட ஒரு கேலன் டீசல், இந்திய மதிப்பில் ரூ.552.42-க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் சந்தையில் தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் டீசல் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, ஒரு கேலன் அதாவது சுமார் 3.78 லிட்டர் டீசலின் விலை இந்திய மதிப்பில் ரூ.552.42 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் டீசல் விலை வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் போர் பதற்றம், எரிபொருள் விநியோகம் தொடர்பான அச்சம் உள்ளிட்ட காரணிகள் டீசல் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
