Skip to content

அரசு திட்டங்களின் பெயர்கள் மாற்றம் – தவெக அரசு வெளியிட்ட புதிய பட்டியல்.

கலைஞர், நான் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டங்களுக்கு புதிய பெயர்கள் அறிவிப்பு.

அரசு திட்டங்களின் பெயர்கள் மாற்றம்.

அரசு திட்டங்களின் பெயர்கள் மாற்றம் தொடர்பாக தவெக அரசு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள பல அரசு நலத்திட்டங்களுக்கு புதிய பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் 2026–27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

மாற்றப்பட்ட திட்டங்களின் புதிய பெயர்கள்

அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, கலைஞர் கனவு இல்லத் திட்டம் இனி “வெற்றி வீடு திட்டம்” என்றும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் “மகளிர் உரிமைத் திட்டம்” என்றும் அழைக்கப்படும்.

அதேபோல், விலையில்லா மடிக்கணினி திட்டம் “வெற்றி மடிக்கணினி திட்டம்”, விலையில்லா மிதிவண்டி திட்டம் “நல்வினை மிதிவண்டி திட்டம்”, VBGRAMG தூய்மை திட்டம் “வெற்றி 150”, அரசு மாதிரி மற்றும் தகைசால் பள்ளிகள் “காமராஜர் சிறப்பு பள்ளிகள்”, நான் முதல்வன் திட்டம் “வெற்றி திறன் பயிற்சி” என்ற புதிய பெயர்களில் செயல்படுத்தப்பட உள்ளன.

அரசியல் வட்டாரங்களில் விவாதம்

அரசு திட்டங்களின் பெயர் மாற்ற அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு இது நிர்வாக மாற்றத்தின் ஒரு பகுதியாகும் என விளக்கமளித்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கையை விமர்சித்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *