நவி மும்பையில் இருந்து வந்த இண்டிகோ விமானம், ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இரும்புக் கம்பத்தில் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இண்டிகோ விமானம் விபத்து ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவி மும்பையில் இருந்து வந்த இண்டிகோ விமானம், பத்திரமாக தரையிறங்கி நிறுத்தும் இடத்திற்கு சென்றபோது இரும்புக் கம்பத்தில் மோதியதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமானம் தரையிறங்கிய பின்னர் நிறுத்தும் இடத்திற்கு நகர்ந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், விமானம் இரும்புக் கம்பத்தில் மோதிய சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
