Skip to content

“தனி தொகுதி” என்பதற்கு பதில் “உரிமைத் தொகுதி” எனக் குறிப்பிட வேண்டும் – தவெக உறுப்பினர் சிந்து

உரிமைத் தொகுதி என்று குறிப்பிடலாம் என குடியாத்தம் (தனி) தொகுதி தவெக உறுப்பினர் சிந்து சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்துள்ளார். “தனி தொகுதி” எனக் குறிப்பிடாமல், அவற்றை “சிறப்பு தொகுதி” அல்லது “உரிமைத் தொகுதி” என அழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“தமிழில் ஒரு சொல் கொல்லும், மறுசொல் வெல்லும்”

சட்டப்பேரவையில் பேசிய தவெக உறுப்பினர் சிந்து, “தனி தொகுதி” என்ற சொல்லுக்கு மாற்றாக “சிறப்பு தொகுதி” அல்லது “உரிமைத் தொகுதி” என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

“தமிழில் ஒரு சொல் கொல்லும், மறுசொல் வெல்லும்” எனக் குறிப்பிட்ட அவர், வார்த்தைகளின் பயன்பாடு சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை கருத்தில் கொண்டு, உரிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார்.

முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்

சிந்து முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளித்த சபாநாயகர், இந்த விவகாரம் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதன் மூலம் சட்டப்பேரவையில் “தனி தொகுதி” என்ற சொல்லுக்குப் பதிலாக மாற்றுச் சொல்லை பயன்படுத்துவது தொடர்பான விவாதம் கவனம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *