Skip to content

கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதியில் வெற்றிக்கனியை தட்டிப்பறிக்கப்போவது யார்? திமுகவில் போட்டியிட விரும்புவோர் பட்டியல் மிக நீநீநீளம்…!

கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதி (எண் – 136)

கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் தனித் தொகுதி, 1967 தொடங்கி இதுவரை 13 தேர்தல்களைச் சந்தித்துள்ளது.

இதில், ஒருங்கிணைந்த அதிமுக மற்றும் திமுக தலா ஐந்து முறையும், காங்கிரஸ் இரு முறையும், அதிமுக ஜெ . அணி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

முத்தரையர், ஊராளி கவுண்டர், குரும்ப கவுண்டர், நாயக்கர், பட்டியலினத்தோர் மற்றும் ரெட்டியார் சமூகத்தினர் நிறைந்த தொகுதியாகும்.

திமுகவில் போட்டியிட விரும்புவோர் எண்ணிக்கை மிக அதிகம்

வரும் தேர்தலில் திமுகவில் சீட் கேட்போர் எண்ணிக்கை மிகப்பெரிய பட்டியலாக உள்ளது.
அந்த வகையில், தற்போதைய எம்எல்ஏவான சிவகாமசுந்தரி மீண்டும் சீட் கேட்கிறார். அவரைத் தவிர மாவட்ட துணைச் செயலாளர் பூவை ரமேஷ் பாபு, முன்னாள் எம்எல்ஏக்களான எஸ். காமராஜ், ஒன்றியச் செயலாளர் ரவிராஜா, ஒன்றிய துணைச் செயலாளர் ஜெகதாபி கார்த்திக், முன்னாள் ஒன்றியச் சேர்மன் சுமித்ராதேவி ஆகியோரும் சீட் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

தற்போதைய சூழலில் திமுகவின் கை சற்று ஓங்கியுள்ளது

கடந்த தேர்தலில் திமுகவின் சிவகாமசுந்தரி 96,000 வாக்குகளைப் பெற்றார். அவருக்கு அடுத்த இடத்தைப் பிடித்த அதிமுகவின் முத்துக்குமார் என்ற தானேஷ்-க்கு 65,000 வாக்குகள் கிடைத்தன. நாம் தமிழர் கட்சியின் இரா. இலக்கியா 9,800 வாக்குகளைப் பெற்றார்.

2026 தேர்தலில் தவெக கட்சியும் களம் காண்பதால் பல கட்சிகளின் வாக்கு வங்கி சிதற வாய்ப்புள்ளது. அந்தக் கட்சிக்கு எவ்வளவு வாக்குகள் கிடைக்கும் என்பது கணிக்க முடியாத நிலையில் உள்ளது.

கட்சிக் கட்டமைப்பு, கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட விசயங்களால் திமுகவின் கை சற்று ஓங்கி உள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *