கோவை வடக்கு தொகுதி (எண் – 118)
2007ஆம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பின்போது, கோவை கிழக்கு என்றழைக்கப்பட்டு வந்த தொகுதி கோவை வடக்கு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
2011 முதல் மூன்று தேர்தல்களைச் சந்தித்துள்ள இந்தத் தொகுதியில், மூன்று முறையும் அதிமுகவே வென்றுள்ளது.
தொகுதியில் கவுண்டர், முதலியார், அருந்ததியர், போயர் சமுதாய மக்கள் கணிசமாக உள்ளனர்.
வேறு தொகுதிக்கு மாற சிட்டிங் அதிமுக எம்எல்ஏ திட்டமா?
அதிமுகவைச் சேர்ந்த தற்போதைய எம்எல்ஏ அம்மன் அர்ச்சுணன், இதே தொகுதியில் நிற்க விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
அதிமுக கூட்டணியில், கோவை தெற்குத் தொகுதி எம்எல்ஏவான பாஜகவின் வானதி சீனிவாசன், இந்த தொகுதியை குறிவைப்பதாகக் கூறப்படுகிறது. அவர் கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்.
மொத்தம் 3 தேர்தல்; ஒரு முறை கூட வென்றிராத திமுக!
கோவை வடக்கில் ஒருமுறைகூட வென்றிராத திமுக, இம்முறை இத்தொகுதியை குறிவைத்து களமிறங்க வியூகம் வகுத்து வருகிறது.
அக்கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் கல்பனா, பொருளாளர் எஸ்.எம். முருகன், பகுதிச் செயலாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் சீட் பெற முனைப்புக் கொண்டுள்ளனர்.
முந்தைய தேர்தலில் அம்மன் அர்ஜூனன் 81,000 வாக்குகளையும், திமுகவின் வ.ம.சண்முகசுந்தரம் 77,000 வாக்குகளையும் பெற்றனர். மக்கள் நீதி மய்ய வேட்பாளர் தங்கவேலுவுக்கு 26,000 வாக்குகள் கிடைத்தது.
2026 தேர்தலில் களம் காணும் தவெக கணிசமான வாக்குகளைப் பிரிக்கும் எனக் கூறப்பட்டாலும், திமுக –அதிமுக இடையே தான் போட்டி நிலவும் எனப் பேசப்படுகிறது.