Skip to content

சட்டப்பேரவை தேர்தல் எதிரொலி; விண்ணைத் தொடும் ஆம்னி பேருந்து கட்டணங்கள்; அதிர்ச்சியில் பயணிகள்!

சென்னை,ஏப்.20; தமிழ்நாட்டில் சட்​டப்​பேரவை தேர்​தலுக்​கான வாக்​குப்​ப​திவு வரும் வியாழக்​கிழமை (ஏப்ரல் 23, 2026) நடை​பெறவுள்​ளது. தேர்தலை முன்னிட்டு அன்​றைய தினம் பொது விடு​முறை​யாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. சென்னை போன்ற பெருநகரங்​களில் தனி​யார் நிறு​வனங்​களில் பணி​யாற்​று​பவர்​கள் வாக்​களிக்க தங்​கள் சொந்த ஊர்​களுக்கு செல்​ல தயாராகி வருகின்றனர். அவர்​களின் வசதிக்​காக நாளை (ஏப்ரல் 21, செவ்வாய்) முதல் தமிழ்நாடு அரசு போக்​கு​வரத்து துறை சார்​பில் சுமார் 10 ஆயிரம் பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன.

3 மடங்கு வரை உயர்ந்த கட்டணங்கள்

அரசு பேருந்துகளில் முன்பதிவு கிடைக்காத பயணிகள் தனியார் ஆம்னி பேருந்துகளை நாடுகின்றனர். இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு சில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கட்டணத்தை 2 முதல் 3 மடங்கு வரை உயர்த்தியுள்ளனர்.

முக்கிய நகரங்களுக்கான தற்போதைய கட்டண நிலவரம்:

சென்னை – நெல்லை: சாதாரண நாட்களில் ரூ.1,500 வரை இருந்த கட்டணம் தற்போது ரூ.3,000 வரை வசூலிக்கப்படுகிறது.

சென்னை – மதுரை: அதிகபட்சமாக ரூ.2,200 நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.3,500 வரை உயர்ந்துள்ளது.

சென்னை – திருச்சி: ரூ.1,500-க்கு பதிலாக ரூ.2,600 வரை வசூலிக்கப்படுகிறது.

தூத்துக்குடி: ஏசி படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் ரூ.3,200 வரை கட்டணம் எகிறியுள்ளது.

ஜனநாயகக் கடமைக்குத் தடையாகும் கட்டணக் கொள்ளை

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால், நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ‘தேர்தல்’ போன்ற ஒரு முக்கிய ஜனநாயகக் கடமையை நிறைவேற்றச் செல்லும் மக்களிடம் இவ்வளவு கூடுதல் கட்டணம் வசூலிப்பது நியாயமற்றது என சமூக ஆர்வலர்கள் மற்றும் பயணிகள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை தேவை

தேர்தல் நேரத்தில் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாத வண்ணம் போக்குவரத்துத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பொதுமக்கள் அச்சமின்றி ஊர் சென்று வாக்களிக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *