Skip to content

சமூக வலைதளங்களை பயன்படுத்தி மகுடம் சூடிய விஜய்! தேர்தல் வெற்றிக்கு கைகொடுத்த விந்தை!

சென்னை,மே.06; நடந்து முடிந்துள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் மாநில அரசியலில் ஒரு புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களம் கண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மரபுவழி ஊடகங்களை விட நவீன டிஜிட்டல் தளங்களையே தனது வெற்றிக்கான பிரதான ஆயுதமாக மாற்றிக்கொண்டார்.

செல்போன் வழியாகச் சென்றடைந்த தேர்தல் பரப்புரை

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தனிமனிதனின் கைகளிலும் இன்று ஸ்மார்ட்போன் தவழ்கிறது. இதைக் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட விஜய், பெரிய ஊடக நிறுவனங்களின் ஆதரவை விட, நேரடியாக மக்களின் செல்போன் திரைகளுக்கே தனது பரப்புரைகளை கொண்டு சென்றார்.

தவெக கட்சிக்கென அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல், பேஸ்புக், எக்ஸ் (X), இன்ஸ்டாகிராம் மற்றும் டெலிகிராம் பக்கங்கள் மிக நேர்த்தியாக நிர்வகிக்கப்பட்டன. இது கட்சித் தொண்டர்களுக்கும் வாக்காளர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்தது.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களும் வைரல் வீடியோக்களும்

விஜய்யின் ரோடு ஷோக்கள், தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் மற்றும் அரசியல் பேச்சுகள் அனைத்தும் சிறிய ரீல்ஸ் (Reels) வீடியோக்களாக மாற்றப்பட்டு வைரலாக்கப்பட்டன. குறிப்பாக தூத்துக்குடி, திருப்பூர் மற்றும் சென்னை போன்ற நகரங்களில் அவருக்குத் திரண்ட லட்சக்கணக்கான மக்களின் காணொளிகள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி, வாக்காளர்கள் மத்தியில் ஒரு பெரிய “ஆதரவு அலையை” (Wave) உருவாக்கியது.

அல்காரிதம் மூலம் இளைஞர்களை ஈர்த்த தந்திரம்

பெரிய அரசியல் கட்சிகள் தொலைக்காட்சி விளம்பரங்களுக்குக் கோடி கோடியாய் செலவு செய்த நிலையில், தவெக சமூக வலைதள அல்காரிதம்களைச் (Algorithms) சாதகமாகப் பயன்படுத்தியது. இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் கட்சியின் பாடல்களும் வசனங்களும் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்தன. இது முதல்முறை வாக்காளர்களைக் கவர்ந்து, அவர்களைத் தவெக பக்கம் திசைதிருப்ப உதவியது.

அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக சமூகவலைதளங்கள்!

ஊடகங்களின் விமர்சனங்களுக்குத் தனது சமூக வலைதளப் பக்கங்கள் மூலமே தகுந்த பதிலடி கொடுத்த விஜய், டிஜிட்டல் உலகமே இன்றைய அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளதை நிரூபித்துள்ளார். தொழில்நுட்பத்தையும் அரசியலையும் இணைத்து அவர் செய்த இந்தப் பயணம், தமிழ்நாடு அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *