சீனாவில் அரசு அலுவலக கணினிகளில் சீனா விண்டோஸ் இயங்குதளம் பயன்படுத்தப்பட்டால், அதனை மாற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்டோஸிற்கு பதிலாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இயங்குதளங்கள் அல்லது லினக்ஸ் சார்ந்த தளங்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தரவு பாதுகாப்புக்கு முக்கியத்துவம்
தரவு பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப சுயசார்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அமெரிக்க தொழில்நுட்பங்களை சார்ந்திருப்பதை குறைக்கும் நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாகவே அரசு அலுவலக கணினிகளில் பயன்படுத்தப்படும் விண்டோஸ் இயங்குதளத்திற்கு மாற்றாக உள்நாட்டு தயாரிப்புகள் அல்லது லினக்ஸ் சார்ந்த இயங்குதளங்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க தொழில்நுட்பங்களில் இருந்து விலகும் சீனா
அரசு நிறுவனங்களின் முக்கியமான தரவுகள் மற்றும் தகவல்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், வெளிநாட்டு தொழில்நுட்பங்களை சார்ந்திருப்பதை குறைக்க சீனா நடவடிக்கை எடுத்து வருகிறது.
