ஜனநாயகப் படுகொலை நடைபெறுவதாக திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார். எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க தவெக அரசு அதிகாரத்தை பயன்படுத்துவதாக அவர் விமர்சித்துள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்படுவது தொடர்பாக பேசிய ரகுபதி, நேரு தனது வீட்டை சுத்தம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை என்றும், லஞ்ச ஒழிப்புத்துறையே அடிக்கடி நேருவின் வீட்டை சோதனை செய்து வருவதாகவும் விமர்சித்துள்ளார்.
சட்டமன்றத்தில் கே.என்.நேரு பேசினாலே அது தவறா? என்றும் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துகளை சட்டமன்றத்தில் தெரிவிப்பது ஜனநாயகத்தின் முக்கியமான அம்சம் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இதன் மூலம் தவெக அரசு ஜனநாயகப் படுகொலை செய்வதாகவும் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார்.
கே.என்.நேரு தொடர்பான லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கையை முன்வைத்து திமுக மற்றும் தவெக இடையே அரசியல் ரீதியான விமர்சனங்கள் அதிகரித்துள்ள நிலையில், ரகுபதியின் இந்த பேட்டி தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
