அரசு திட்டங்களுக்கு பெயர் மாற்றமா? கடன் சுமை குறைப்பது எப்படி? – எதிர்க்கட்சிகள் கேள்வி
தமிழக பட்ஜெட் அறிவிப்புகள்
தமிழக பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம் தெரிவித்துள்ளனர். அரசு அறிவித்த திட்டங்கள் மற்றும் மாநில நிதி நிலை தொடர்பாக இருவரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “ஆட்சிக்கு வரும்முன் மாற்றம் என்றனர். என்ன மாற்றம் என்று பார்த்தால் பெயர் மாற்றம் மட்டும்தான். ஏற்கெனவே இருக்கும் திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்து ஸ்டிக்கர் ஒட்டும் அறிவிப்பாகவே செயல்பட்டுள்ளனர்” என்று விமர்சித்தார்.
பிரேமலதா விஜயகாந்த் கேள்வி
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “10 லட்சம் கோடி ரூபாய் கடனை தவெக அரசு எப்படி குறைக்கப் போகிறது?” என்று கேள்வி எழுப்பினார். மாநிலத்தின் நிதி மேலாண்மை மற்றும் கடன் சுமையை குறைக்கும் அரசின் திட்டம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
