Skip to content

“தமிழுக்கு இணையாக இந்தியை கொண்டு வரலாமா?” – வேல்முருகன் கடும் கண்டனம்

கோயில்களில் செல்போன் ஒப்படைக்கும் இடங்களில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தி இடம்பெறுவதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எதிர்ப்பு.

தமிழுக்கு இணையாக இந்தி மொழியை கோயில்களில் கொண்டு வரலாமா என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டின் பெரிய கோயில்களில் செல்போன் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், செல்போன்களை ஒப்படைக்கும் பாதுகாப்பு இடங்களில் உள்ள அறிவிப்புப் பலகைகளில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் இடம்பெற்றிருப்பதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ் வெறும் ஒரு மொழி அல்ல என்றும், ஆயிரமாயிரம் ஆண்டுகளைக் கடந்து வாழும் ஒரு பேரினத்தின் பண்பாட்டு அடையாளம் என்றும் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழுக்கு இணையாக இந்தி கொண்டுவரப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் கூறிய அவர், தமிழகத்தின் மொழி மற்றும் பண்பாட்டு அடையாளத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கோயில்களில் பக்தர்களுக்கான அறிவிப்புப் பலகைகளில் இந்தி இடம்பெற்றிருப்பது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ள இந்த கருத்து தற்போது கவனம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *