Skip to content

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்; அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்தவர்கள் யார்?

சென்னை,மே.05; தமிழ்நாட்டில் அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ள 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி அனைவரையும் அதிர வைத்துள்ளன. இந்தத் தேர்தலில் பல தொகுதிகளில் கடும் போட்டி நிலவினாலும், சில வேட்பாளர்கள் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் முழு விவரங்களை கீழே காண்போம்.

எடப்பாடி பழனிசாமி: முதலிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர்

தமிழ்நாட்டிலேயே மிக அதிகபட்சமாக, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் பிரேம்குமாரை விட 98,110 வாக்குகள் அதிகம் பெற்று மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளார். இத்தொகுதி அவரது கோட்டை என்பதை மீண்டும் ஒருமுறை இந்த வெற்றி நிரூபித்துள்ளது.

தவெக-வின் அதிரடி வெற்றிப் பட்டியல்

இந்தத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பல தொகுதிகளில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சோழிங்கநல்லூர்: தவெக வேட்பாளர் சரவணன், தி.மு.க வேட்பாளர் அரவிந்த் ரமேஷை 96,780 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

மாதவரம்: தவெக வேட்பாளர் விஜய் பிரபு, திமுக-வின் எஸ்.சுதர்சனத்தை 94,985 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

பூந்தமல்லி: தவெக வேட்பாளர் பிரகாசம், திமுக வேட்பாளரை விட 72,740 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

சேலம் கிழக்கு: தவெக வேட்பாளர் எஸ்.லட்சுமணன் 74,867 வாக்குகள் வித்தியாசத்தில் பாமக வேட்பாளரை வீழ்த்தினார்.

மற்ற முக்கிய தொகுதிகளின் முடிவுகள்:

தவெக வேட்பாளர்கள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்:

மதுரவாயல்: ரேவந்த் சரண் (தவெக) – 61,509 வாக்குகள் வித்தியாசம்.

அம்பத்தூர்: பாலமுருகன் (தவெக) – 58,781 வாக்குகள் வித்தியாசம்.

பொன்னேரி: டாக்டர் ரவி (தவெக) – 55,768 வாக்குகள் வித்தியாசம்.

பல்லாவரம்: ஜெ.காமாட்சி (தவெக) – 54,693 வாக்குகள் வித்தியாசம்.

பெரம்பூர்: ஜோசப் விஜய் (தவெக) – 53,715 வாக்குகள் வித்தியாசம்.

விராலிமலையில் விஜயபாஸ்கர் வெற்றி

அதிமுக-வின் முக்கிய முகமான டாக்டர் விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதியில் தவெக வேட்பாளர் முருகேசனை 62,073 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து தனது பலத்தை மீண்டும் நிரூபித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *