Skip to content

“தலைநகர் சென்னை என்றுமே திமுகவின் கோட்டை”: இறுதிக்கட்டப் பரப்புரைக்குப் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

சென்னை,ஏப்.21; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுதினம் (ஏப்ரல் 23, 2026) நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்பாளர்கள், அவர்கள் சார்ந்திருக்கும் கட்சிகளின் தலைவர்கள், தேர்தல் பரப்புரையின் கடைசிநாளான இன்று (ஏப்ரல் 21, செவ்வாய்) தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர்.

அதன் ஒரு பகுதியாக, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னையின் முக்கியப் பகுதிகளில் சூறாவளிப் பரப்புரையில் ஈடுபட்டார்.

சென்னையில் ஸ்டாலினின் நடைப்பயண பரப்புரை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் உள்ள சோழிங்கநல்லூர், வேளச்சேரி மற்றும் சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாகனத்தில் செல்வதைத் தவிர்த்து, பல இடங்களில் மக்களிடையே நேரடியாக நடந்து சென்று அவர் வாக்குக் கேட்டது பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மக்களின் உற்சாக வரவேற்பு மற்றும் செல்பி

முதலமைச்சர் சென்ற இடமெல்லாம் மக்கள் அலைகடலெனத் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பரப்புரையின் போது குழந்தைகளின் தலையை வருடியும், குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்சியும் தனது அன்பை வெளிப்படுத்தினார் ஸ்டாலின்.

இளைஞர்களும், பெண்களும் ஆர்வத்துடன் முதலமைச்சருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

மக்களின் இந்த வரவேற்பு திமுகவின் வெற்றியை இப்போதே உறுதி செய்வது போல் அமைந்திருந்தது.

“சென்னை திமுகவின் கோட்டை” – முதலமைச்சர் பதிவு

தனது சென்னைப் பரப்புரை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“சென்னை என்றுமே திமுக-வின் கோட்டை! சோழிங்கநல்லூர், வேளச்சேரி, சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளில் மக்கள் அளித்த அன்பும் வரவேற்பும் நெஞ்சை நெகிழச் செய்கிறது. ‘தமிழ்நாடு போராடும்.. தமிழ்நாடு வெல்லும்..’ ஒன்றாக வெல்வோம்!” இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னையின் ஒவ்வொரு வீதியிலும் ஸ்டாலினுக்குக் கிடைத்த வரவேற்பு, அந்த நகரம் மீண்டும் திமுகவின் பக்கம் என்பதை உரக்கச் சொல்வதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். தேர்தல் களம் தற்போதே இறுதித் தீர்ப்பை நோக்கி நகரத் தொடங்கிவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *