Skip to content

“தவெகவைப் பார்த்து திமுக ஒருபோதும் அஞ்சாது” – கனிமொழி

தவெகவைப் பார்த்து திமுக ஒருபோதும் அஞ்சாது என திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் திமுகவை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், தொடர்ந்து அவதூறுகளையும் திசைதிருப்பல் நாடகங்களையும் தவெக அரசு அரங்கேற்றி வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

காழ்ப்புணர்ச்சியின் உச்சத்திற்கே சென்று, திமுக முதன்மைச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான கே.என்.நேருவை பழிவாங்க முயற்சிப்பதாக கனிமொழி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

மிரட்டல்களுக்கும் சோதனைகளுக்கும் பணிந்து போகும் இயக்கம் திமுக அல்ல என்றும் அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சியின் குரல்வளையை நெரிப்பதற்காக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் நடவடிக்கைகளை திமுக ஒருபோதும் அஞ்சாது என்றும் கனிமொழி தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனநாயக விரோத நடவடிக்கைகள் மூலம் எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்க முடியாது எனவும், அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் திமுக தொடர்ந்து எதிர்கொள்ளும் என்ற நிலைப்பாட்டை கனிமொழி தனது பதிவில் வெளிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *