சென்னை,மார்ச்.29; திமுக கூட்டணியில் 70 தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. திமுக போட்டியிடும் 164 தொகுதிகளின் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் நேற்று (மார்ச் 28, 2026)வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து கூட்டணி கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.
அந்த வகையில் மதிமுக-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நான்கு தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.
அதன்படி,
- மொடக்குறிச்சி – செந்தில்நாதன்
- மதுரை தெற்கு – பூமிநாதன்
- கடையநல்லூர் – ராஜேந்திரன்
- சீர்காழி (தனி) – செந்தில் செல்வன்
இதேபோல மற்றொரு கூட்டணிக் கட்சியான கொமதேக-வுக்கு (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி) ஒதுக்கப்பட்டுள்ள 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி,
- திருச்செங்கோடு – ஈஸ்வரன்
- பொள்ளாச்சி – நித்தியானந்தன்
திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 2 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
1, நாகப்பட்டினம் – ஜவாஹிருல்லா (தற்போதைய பாபநாசம் தொகுதி எம்எல்ஏ)
- மணப்பாறை – அப்துல் சமது (தற்போதைய எம்எல்ஏ)
இவர்கள் இருவரும் திமுகவின் சின்னமான உதயசூரியனில் போட்டியிட உள்ளனர்.
