எந்த இடத்தில் விமான நிலையம் அமைத்தாலும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும்; திட்டத்தை கைவிடுவது பொருளாதார வளர்ச்சிக்கு பின்னடைவு என கருத்து
பரந்தூர் விமான நிலைய திட்டம் தொடர்பாக பல்வேறு இடங்களில் ஆய்வு செய்த பிறகே பரந்தூர் பகுதி தேர்வு செய்யப்பட்டதாக திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
பல இடங்களில் ஆய்வு மேற்கொண்ட பின்னரே பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார். எந்தப் பகுதியில் விமான நிலையம் அமைத்தாலும் அங்கு விவசாய நிலங்கள் இருக்கும் என்றும், அதனால் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னை விமான நிலையத்தில் இரண்டாவது ரன்வே அமைப்பதற்கான வாய்ப்பு குறித்து கேள்வி எழுப்பிய தங்கம் தென்னரசு, தற்போதைய சூழலில் சென்னை விமான நிலையத்தில் எப்படி 2ஆவது ரன்வே அமைக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுவது தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என்றும் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னையின் எதிர்கால விமானப் போக்குவரத்து தேவைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு பரந்தூர் விமான நிலைய திட்டம் முக்கியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
