Skip to content

பரபரக்கும் தமிழ்நாடு அரசியல் களம்; தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது!

சென்னை,ஏப்.30; 234 தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு கடந்த 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக 85.10 விழுக்காடு வாக்குகள் பதிவானது. இந்த வாக்குகள் வரும் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் நேற்று (ஏப்ரல் 29, 2026) வெளியிடப்பட்டன. தமிழ்நாட்டில் பெரும்பான்மைக்கு 118 தொகுதிகள் தேவை என்ற நிலையில், பல்வேறு நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன..

அதன்படி,

பீப்பிள்ஸ் பல்ஸ் நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள்

திமுக கூட்டணி – 125 முதல் 145 தொகுதிகளில் வெற்றி

அதிமுக கூட்டணி – 65 முதல் 80 தொகுதிகளில் வெற்றி

தவெக – 18 முதல் 24 தொகுதிகளில் வெற்றி

மற்ற கட்சிகள் – 2 முதல் 6 தொகுதிகளில் வெற்றி

ஜேவிசி நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள்

திமுக கூட்டணி – 75 முதல் 95 தொகுதிகளில் வெற்றி

அதிமுக கூட்டணி – 128 முதல் 147 தொகுதிகளில் வெற்றி

தவெக – 8 முதல் 15 தொகுதிகளில் வெற்றி

பிற கட்சிகள் – 0

ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணி – 92 முதல் 110 தொகுதிகளில் வெற்றி

அதிமுக கூடணி – 22 முதல் 32 தொகுதிகளில் வெற்றி

தவெக – 98 முதல் 120 தொகுதிகளில் வெற்றி

மற்றவை – 0

மெட்ரிஸ் நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்புகள்

திமுக கூட்டணி – 122 முதல் 132 தொகுதிகளில் வெற்றி

அதிமுக கூட்டணி – 87 முதல் 110 தொகுதிகளில் வெற்றி

தவெக – 10 முதல் 12 தொகுதிகளில் வெற்றி

மற்ற கட்சிகள் – 0 முதல் 6 தொகுதிகளில் வெற்றி

பி-மார்கியூ நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள்

திமுக கூட்டணி – 125 முதல் 145 தொகுதிகளில் வெற்றி

அதிமுக கூட்டணி – 65 முதல் 85 தொகுதிகளில் வெற்றி

தவெக – 16 முதல் 26 தொகுதிகளில் வெற்றி

பிற கட்சிகள் – 1 முதல் 6 தொகுதிகளில் வெற்றி

பீப்பிள்ஸ் இன்சைட் நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்புகள்

திமுக கூட்டணி – 120 முதல் 140 தொகுதிகளில் வெற்றி

அதிமுக கூட்டணி – 60 முதல் 70 தொகுதிகளில் வெற்றி

தவெக – 30 முதல் 40 தொகுதிகளில் வெற்றி

மற்றவை – 0 முதல் 4 தொகுதிகள் வரை வெற்றி

கமஹ்யா அனாலிட்டிக்ஸ் நிறுவனத்தின் கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணி – 78 முதல் 95 தொகுதிகளில் வெற்றி

அதிமுக கூட்டணி – 68 முதல் 84 தொகுதிகளில் வெற்றி

தவெக – 67 முதல் 81 தொகுதிகளில் வெற்றி

மற்றவை – 0

பிரஜா போல்ஸ் நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள்

திமுக கூட்டணி – 148 முதல் 168 தொகுதிகளில் வெற்றி

அதிமுக கூட்டணி – 61 முதல் 81 தொகுதிகளில் வெற்றி

தவெக – 1 முதல் 9 தொகுதிகளில் வெற்றி

மற்றவை – 0


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *