Skip to content

பாஜகவில் இணைந்த ராகவ் சதா; 24 மணி நேரத்தில் இன்ஸ்டாகிராமில் 10 லட்சம் பின் தொடர்பவர்களை இழந்தார்!

டெல்லி,ஏப்.25; ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த ஒரு சில மணி நேரங்களிலேயே, மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சதா தனது சமூக வலைதள செல்வாக்கில் பெரும் சரிவைச் சந்தித்துள்ளார். குறிப்பாக ‘ஜென்-இசட்’ (Gen Z) எனப்படும் இளைய தலைமுறையினர் மத்தியில் அவருக்கு இருந்த ஆதரவு குறையத் தொடங்கியுள்ளது.

அதிர்ச்சி கொடுத்த அரசியல் மாற்றம்

டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ராகவ் சதா, ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவருடன் 6 ஆம் ஆத்மி எம்பிக்களும் பாஜகவுக்குச் சென்றது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. ராகவ் சதா முன்னதாக ஆம் ஆத்மியின் மாநிலங்களவைத் துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட போதே அவர் கட்சி மாறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இன்ஸ்டாகிராமில் சரிந்த மகுடம்

இன்றைய டிஜிட்டல் உலகில் ஒரு அரசியல்வாதியின் செல்வாக்கை அளவிடும் கருவியாக சமூக வலைதளங்கள் உள்ளன. ராகவ் சதா பாஜகவில் இணைந்த 24 மணி நேரத்திற்குள், அவரது இன்ஸ்டாகிராம் கணக்கை சுமார் 10 லட்சம் (1 Million) பேர் ‘அன்ஃபாலோ’ (Unfollow) செய்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை நிலவரம்: 14.6 மில்லியன் பாலோயர்கள் விலகல்

சனிக்கிழமை மதியம்: 13.5 மில்லியன் பாலோயர்கள்.இளைய தலைமுறையின் (Gen Z) கோபம் ராகவ் சதா இளைஞர்களின் பிரச்னைகளான தந்தைவழி விடுப்பு (Paternity leave), போக்குவரத்து நெரிசல், டெலிகாம் நிறுவனங்களின் டேட்டா லிமிட் மற்றும் டெலிவரி ஊழியர்களின் நலன் ஆகியவற்றிற்காகக் குரல் கொடுத்து வந்தார்.

பிளிங்கிட் (Blinkit) ஊழியராக ஒருநாள் வேலை செய்து அவர்களின் கஷ்டங்களை உணர்ந்தது இளைஞர்கள் மத்தியில் அவருக்கு ஒரு தனி நற்பெயரைத் தந்தது.தற்போது அவர் பாஜகவில் இணைந்ததை இளைய தலைமுறை ஒரு ‘ஏமாற்றமாக’ பார்க்கிறது. சமூக வலைதளங்களில் #unfollowRaghavChadha என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

பழைய பதிவுகள் நீக்கம்?

ராகவ் சதா பாஜகவில் இணைந்த கையோடு, பிரதமர் நரேந்திர மோடியையும் பாஜகவையும் விமர்சித்து அவர் பதிவிட்டிருந்த பழைய பதிவுகளை நீக்கி வருவதாக ஆம் ஆத்மி தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். தற்போது அவரது சமூக வலைதளப் பக்கங்களில் பிரதமரைப் பாராட்டிப் பேசும் வீடியோக்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.

அரசியல் களத்தில் மாற்றங்கள் சகஜம் என்றாலும், தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்யும் ராகவ் சதாவுக்கு, இந்த ‘டிஜிட்டல் சரிவு’ ஒரு சவாலாகவே இருக்கும். இளைஞர்களின் நம்பிக்கையை மீண்டும் பெற அவர் என்ன செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *