முதல்வர் விஜய் பிரதமர் வேட்பாளராக நிற்கலாம்; ஆதரவு இருக்கும் என பேச்சு
முதல்வர் விஜய் பிரதமர் வேட்பாளராக நிற்கலாம் என புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய்க்கு தமிழ்நாட்டை தாண்டியும் மற்ற மாநிலங்களில் ஆதரவு அதிகமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். இதன் காரணமாக, விஜய் பிரதமர் வேட்பாளராக போட்டியிடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பூவை ஜெகன் மூர்த்தி கூறுகையில், “முதல்வர் விஜய் பிரதமர் வேட்பாளராக நிற்கலாம். ஏன் பிரதமராக கூட வரலாமே, அதில் என்ன தப்பு?” என தெரிவித்துள்ளார்.
மேலும், முதல்வர் விஜய் பிரதமர் வேட்பாளராக வந்தால், அவருக்கு தங்களது ஆதரவு இருக்கும் என்றும் பூவை ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசியலை தாண்டி தேசிய அரசியலில் விஜய்க்கு வாய்ப்பு இருப்பதாக முன்வைக்கப்பட்டுள்ள இந்தக் கருத்து, அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது
