Skip to content

விரிவுபடுத்தப்பட்ட தமிழ்நாடு அமைச்சரவை; யார் யாருக்கு எந்த துறைகள்?: ஆளுநர் அறிவிப்பு!

சென்னை,மே.21; முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசில் மேலும் 23 அமைச்சர்கள் சேர்க்கப்பட்டு, அமைச்சரவை (மே 21, 2026)விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

புதிதாக பதவியேற்றிருக்கும் அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்து ஆளுநர் அர்லேகர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

செங்கோட்டையன் வசமிருந்த நிதித்துறை மாற்றம்

முன்னதாக கே.ஏ.செங்கோட்டையன் வசமிருந்த நிதி்த்துறை மரிய வில்சனுக்கு மாற்றப்பட்டுள்ளது.

23 அமைச்சர்களுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கும் துறைகள் விவரம் பின்வருமாறு;

கே.ஏ.செங்கோட்டையன் – வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை (கோபிசெட்டிப்பாளையம் எம்எல்ஏ)

போக்குவரத்துத்துறை – விஜய் தமிழன் பார்த்திபன் (சேலம் தெற்கு எம்எல்ஏ)

இந்து அறநிலையத்துறை – ரமேஷ் (ஸ்ரீரங்கம் எம்எல்ஏ )

உயர் கல்வித்துறை – விஸ்வநாதன் (மேலூர் எம்எல்ஏ-காங்கிரஸ்)

நிதித்துறை – மரியவில்சன் (ஆர்.கே.நகர். எம்எல்ஏ)

மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை – விக்னேஷ் (கிணத்துக்கடவு எம்எல்ஏ)

மீன்வளத்துறை – ஸ்ரீநாத் (தூத்துக்குடி எம்எல்ஏ)

வனத்துறை – ரஞ்சித்குமார் (காஞ்சிபுரம் எம்எல்ஏ)

பால்வளத்துறை – விஜயலட்சுமி (குமாரபாளையம் எம்எல்ஏ)

கால்நடைத்துறை – கமலி (அவிநாசி எம்எல்ஏ)

வேளாண் துறை – வினோத் (கும்பகோணம் எம்எல்ஏ)

சுற்றுச்சூழல்துறை – ராஜீவ் (திருவாடனை எம்எல்ஏ)

வீட்டுவசதித்துறை – ராஜ்குமார் (கடலூர் எம்எல்ஏ)

கூட்டுறவுத்துறை – காந்திராஜ் (அரக்கோணம் எம்எல்ஏ)

சிறு,குறு, நடுத்தர தொழில்துறை – மதன்ராஜா (ஓட்டபிடாரம் எம்எல்ஏ)

சமூகநலன், மகளிர் நலத்துறை – ஜெகதீஸ்வரி (ராஜபாளையம் எம்எல்ஏ)

சுற்றுலாத்துறை – ராஜேஷ் குமார் (கிள்ளியூர் எம்எல்ஏ-காங்கிரஸ்)

கைத்தறி, ஜவுளித்துறை – விஜய் பாலாஜி (ஈரோடு கிழக்கு எம்எல்ஏ)

வணிகவரி, பத்திரப்பதிவுத்துறை – லோகேஷ் தமிழ்ச்செல்வன் (ராசிபுரம் எம்எல்ஏ)

AI, தகவல் தொழில்நுட்பத்துறை – குமார் (வேளச்சேரி எம்எல்ஏ)

வெளிநாடுவாழ் தமிழர் நலன் – தென்னரசு (ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ)

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை – சம்பத் குமார் (கோவை வடக்கு எம்எல்ஏ)

தொழிலாளர் நலத்துறை – முகமது பர்வேஸ் (அறந்தாங்கி எம்எல்ஏ)

மனிதவளத்துறை – சரத்குமார் (தாம்பரம் எம்எல்ஏ)

மாவட்ட வாரியாக எத்தனை அமைச்சர்கள் என்ற விவரம் பின் வருமாறு;

சென்னை – 7 அமைச்சர்கள்

புதுக்கோட்டை 1 அமைச்சர்

நாமக்கல் – 3 அமைச்சர்கள்

சேலம் – 1 அமைச்சர்

காஞ்சிபுரம் – 2 அமைச்சர்கள்

சிவகங்கை – 1 அமைச்சர்

ஈரோடு – 2 அமைச்சர்கள்

இராமநாதபுரம்- 1 அமைச்சர்

கோவை – 2 அமைச்சர்கள்

திருப்பூர் – 1 அமைச்சர்

தூத்துக்குடி – 2 அமைச்சர்கள்

செங்கல்பட்டு – 1 அமைச்சர்

மதுரை – 2 அமைச்சர்கள் (ஒருவர் காங்கிரஸ்)

இராணிப்பேட்டை- 1 அமைச்சர்

விருதுநகர்- 2 அமைச்சர்கள் (இருவரும் பெண் அமைச்சர்கள்)

கன்னியாகுமரி – 1 அமைச்சர் (காங்கிரஸ்)

திருச்சி – 1 அமைச்சர்

கடலூர் – 1 அமைச்சர்

தஞ்சாவூர் – 1 அமைச்சர்

அமைச்சரவையில் இடம்பெறாத மாவட்டங்கள் எத்தனை?

சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற நெல்லை, தேனி, திண்டுக்கல், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், பெரம்பலூர், தருமபுரி, கரூர், கிருஷ்ணகிரி ஆகிய 11 மாவட்டங்களை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை.

விழுப்புரம். திருவாரூர், நீலகிரி, நாகை, மயிலாடுதுறை, அரியலூர், தென் காசி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் த.வெ.க. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *