Skip to content

வெங்காய சேமிப்புக் கிடங்குகளுக்கு ரூ.22 கோடி – அமைச்சர் வினோத் அறிவிப்பு

57 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவில் நவீன வெங்காய சேமிப்பு வசதிகள் அமைக்கப்படும்

வெங்காய சேமிப்புக் கிடங்குகள் அமைப்பதற்காக ரூ.22 கோடி மதிப்பீட்டில், 57 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்பு வசதிகள் உருவாக்கப்பட உள்ளதாக வேளாண் அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டில் அறிவித்தார். வெங்காயத்தை நீண்ட நாட்கள் தரம் குறையாமல் சேமித்து, விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்கச் செய்வதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

நவீன சேமிப்பு வசதிகள் உருவாக்கம்

வேளாண் அமைச்சர் வினோத் கூறுகையில், வெங்காய சேமிப்புக் கிடங்குகள் அமைப்பதன் மூலம் அறுவடை காலங்களில் ஏற்படும் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்தவும், தேவைக்கேற்ப சந்தைப்படுத்தும் வாய்ப்பை விவசாயிகளுக்கு ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளும் குறையும்.

ரூ.22 கோடி மதிப்பீட்டில் 57 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டு, வெங்காய உற்பத்தியாளர்களுக்கு நீண்டகால பலன் கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *