வீடுதோறும் காய்கறி சாகுபடியை ஊக்குவிக்கும் புதிய திட்டம்
வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் திட்டம் செயல்படுத்துவதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக வேளாண் அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டில் அறிவித்தார். வீடுகளிலேயே காய்கறி மற்றும் கீரை உள்ளிட்ட பயிர்களை வளர்க்க ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
வீட்டுத் தோட்டங்களுக்கு அரசின் ஊக்கம்
வேளாண் அமைச்சர் வினோத் கூறுகையில், வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் திட்டம் மூலம் இல்லத்தரசிகள் மற்றும் குடும்பங்கள் தங்கள் வீடுகளில் காய்கறி, கீரை மற்றும் பிற பயனுள்ள தாவரங்களை வளர்க்க தேவையான ஆதரவு வழங்கப்படும்.
இந்தத் திட்டம் மூலம் பாதுகாப்பான, சத்தான உணவுப் பொருட்களை வீடுகளிலேயே உற்பத்தி செய்வதுடன், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்படும். இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
