சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதி (எண் – 90)
2008ஆம் ஆண்டு தொகுதி மறுவரையறையின்போது உருவாக்கப்பட்டது சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதி.
அதன்பிறகு 2011, 2016, 2021 என மூன்று தேர்தல்களை சந்தித்துள்ளது. இவை மூன்றிலும் அதிமுகவே வென்றது.
இத்தொகுதியில் செட்டியார், சோழிய வெள்ளாளர், முதலியார் உள்ளிட்ட சமூகத்தினர் வெற்றி, தோல்வியைத் தீர்மானிப்பவர்களாக உள்ளனர். வன்னியர், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினரும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்.
அதிமுகவைப் பொறுத்தவரையில் தற்போதைய எம்எல்ஏ பாலசுப்பிரமணியன் மீண்டும் சீட் கேட்கிறார். அதேவேளையில் புதுமுகத்திற்கு வாய்ப்பளிக்க தலைமை முடிவெடுத்திருப்பதாகவும் பேசப்படுகிறது.
திமுகவில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட சரவணன், உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பரான பி.கே.பாபு, மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலரும் சீட் பெற முயற்சிக்கின்றனர்.
அதிமுகவின் கோட்டை எனக்கூறப்படும் இத்தொகுதியை கைப்பற்ற திமுக மெனக்கெடுகிறது.
அதிமுக – திமுக இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படும் இத்தொகுதியில், அக்கட்சிகளின் வாக்கு வங்கியை விஜய்யின் தவெக குறைக்கும் என்று கணிக்கப்படுகிறது.
