ஒரு சாதாரண ChatGPT கேள்விக்கு 0.32 மி.லி. நீர் மட்டுமே தேவைப்படுவதாக OpenAI CEO சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.
ChatGPT கேள்விகளுக்கு நீர் பயன்பாடு குறித்து OpenAI CEO சாம் ஆல்ட்மேன் புதிய தகவலை தெரிவித்துள்ளார். ஒரு பாதாம் பருப்பை உற்பத்தி செய்ய தேவைப்படும் நீரின் அளவைக் கொண்டு சுமார் 38,000 கேள்விகளை ChatGPT-யிடம் கேட்க முடியும் என அவர் கூறியுள்ளார்.
ஒரு சாதாரண ChatGPT கேள்விக்கு சராசரியாக 0.32 மில்லி லிட்டர் நீர் மட்டுமே தேவைப்படுவதாக சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.
AI மையங்கள் உலகிலுள்ள அனைத்து நீரையும் அதிக அளவில் பயன்படுத்தி விடுகின்றன என நினைப்பது தவறு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். AI மற்றும் தரவு மையங்களின் தண்ணீர் பயன்பாடு தொடர்பான தகவல்கள் சில நேரங்களில் மிகைப்படுத்தப்படுவதாகவும் சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.
AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த விவாதங்களும் உலகளவில் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தரவு மையங்களின் மின்சாரம் மற்றும் நீர் பயன்பாடு தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
