தமிழ்நாடு முதலமைச்சர் Joseph Vijay அவர்களை இந்திய தொழிற் கூட்டமைப்பான Confederation of Indian Industry (CII) தென் மண்டல மற்றும் தமிழ்நாடு நிர்வாகிகள் நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்பில், CII தென் மண்டல தலைவர் பி. ரவிச்சந்திரன், தமிழ்நாடு தலைவர் சி. தேவராஜன், துணைத் தலைவர் ஜெ. முருகவேல் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சந்திப்பின் போது தமிழ்நாட்டின் தொழிற்துறை வளர்ச்சி, புதிய முதலீடுகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள், தொழில் தொடங்குவதை எளிதாக்கும் நிர்வாக மாற்றங்கள் மற்றும் மாநிலத்தின் நீண்டகால பொருளாதார வளர்ச்சி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தமிழ்நாடு அரசும் இந்திய தொழிற் கூட்டமைப்பும் இணைந்து பல ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது.
மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கான தொலைநோக்கு திட்டங்களுக்கு முழுமையான ஆதரவை வழங்க இந்திய தொழிற் கூட்டமைப்பு உறுதி தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
