HIMALAYAN 440 பைக்கை இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்துள்ளது. புதிய Himalayan 440 பைக்கின் ஆரம்ப விலை ரூ.2.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய HIMALAYAN 440 மூன்று வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Mustang Brown, Sela Black மற்றும் Nelong White ஆகிய வண்ணத் தேர்வுகளில் இந்த பைக் கிடைக்கிறது.
இந்த பைக்கில் 443cc சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் இடம்பெற்றுள்ளது. இது 25.4 bhp பவர் மற்றும் 34 Nm டார்க்கை வழங்குகிறது. மேலும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
HIMALAYAN 440 மாடல், Himalayan 450-ஐ விட குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், அட்வென்ச்சர் பைக் பிரிவில் அதிக கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
