அமெரிக்க வரி மற்றும் சீன நிறுவனங்களின் போட்டி அதிகரிப்பால் செலவினங்களை குறைத்து லாபத்தை உயர்த்த Volkswagen நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்குகிறது.
Volkswagen பணிநீக்கம் தொடர்பான அறிவிப்பு ஆட்டோமொபைல் துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ஜெர்மனி ஆட்டோமொபைல் நிறுவனமான Volkswagen, உலகளவில் 1 லட்சம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் விதிக்கப்படும் வரி மற்றும் சர்வதேச சந்தையில் சீன ஆட்டோமொபைல் நிறுவனங்களின் போட்டி அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் நிறுவனத்தின் செலவினங்களை குறைத்து லாபத்தை அதிகரிக்க Volkswagen திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக 50,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.
Volkswagen நிறுவனத்தின் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை, உலகளாவிய ஆட்டோமொபைல் துறையில் நிலவும் கடுமையான போட்டி மற்றும் அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகளின் தாக்கத்தை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.
