Skip to content

காட்பாடி தொகுதி; துரைமுருகனுக்கு சீட் கிடைக்குமா? கருணாநிதியின் சாதனையை முறியடிப்பாரா?

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி தொகுதி நட்சத்திர அந்தஸ்து கொண்டதாகப் பார்க்கப்படுகிறது. இத்தொகுதி 1962 ஆம் ஆண்டு குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதியைப் பிரித்து உருவாக்கப்பட்டது .

காட்பாடி தொகுதியில் வன்னியர் சமுதாயத்தினர் 40 விழுக்காடு என்கிற அளவில் பெரும்பான்மையாக உள்ளனர். முதலியார் சமூகத்தினர் 20 விழுக்காடும், ஆதிதிராவிடர்கள் 10 விழுக்காடும், நாயுடு உள்ளிட்ட இதர வகுப்பினர் 30 விழுக்காடும் உள்ளனர்.

திமுக பொதுச்செயலாளராக இருக்கும் துரைமுருகன், காட்பாடி தொகுதியில், 1971ஆம் ஆண்டு முதன்முறையாக போட்டியிட்டு வென்றார். பிறகு 1984 தொடங்கி 2021 தேர்தல் வரை இத்தொகுதியில் தொடர்ச்சியாக ஆறுமுறை வென்றுள்ளார்.

ஆனால், 2026 தேர்தலில் அவருக்கு சீட் கிடைக்காது என்று கூறப்படுகிறது.
ஏனென்றால், வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்து வெற்றி பெற்றால், அதிக முறை எம்எல்ஏ-ஆக பதவி வகித்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் சாதனையை துரைமுருகன் தகர்த்து விடுவார்.

காட்பாடி தொகுதி துரைமுருகனின் கோட்டை என்று சொல்லப்பட்டாலும், கடந்த தேர்தலில் நீண்ட இழுபறிக்குப் பின்னர் 746 வாக்குகள் வித்தியாசத்தில் நூலிழையில்தான் வெற்றி பெற்றார்.

இம்முறை துரைமுருகனுக்கு சீட் கிடைக்குமா? என்பதே திமுக உடன்பிறப்புகளின் மத்தியில் எழுந்துள்ள மில்லியன் டாலர் கேள்வி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *